×

பீர்க்கங்காய் பறித்த தகராறு விவசாயி மீது சரமாரி தாக்குதல்

திருக்கோவிலூர், நவ. 12: திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் ஜெயபால் (44), விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனியன் மகன் ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயபால் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன், நடராஜன் ஆகிய 3 பேரும் ஜெயபால் நிலத்துக்கு சென்றனர். அப்போது, ஆனந்தன் நிலத்தில் இருந்த பீர்க்கங்காயை முருகன் பறித்துள்ளார். இதைக்கண்ட ஆனந்தன், அவரது உறவினர் அய்யனார் மகன் சத்தியராஜ் (25), ஆனந்தன் மனைவி மேகலா (29) ஆகிய 3 பேரும் ஜெயபாலுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், ஆனந்தன் இரும்பு ராடால் ஜெயபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஜெயபால் தந்தை குப்பன் திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தன், சத்தியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Volleyball attack ,pepper seed dispute farmer ,
× RELATED கொரோனா டெஸ்ட் எடுக்க சென்ற...