×

சூதாடிய 2 பேர் கைது

திருக்கோவிலூர், நவ. 12: திருக்கோவிலூர் சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் கீழதாழனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரிக்கரை அருகே அதே பகுதியை சேர்ந்த கெங்கநாதன் மகன் முருகன் (30), தண்டபாணி மகன் அழகேசன் (30) ஆகிய 2 பேரும் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்த போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 புள்ளித்தாள், ரூ.20 பணம் ஆகியவையும்
பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி சூதாட்டம்