×

பைக் விபத்தில் விவசாயி பலி

திருக்கோவிலூர், நவ. 12: திருக்கோவிலூர் அருகே வீரப்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் ரங்கநாதன் (49), விவசாயி. இவர் கடந்த 9ம் தேதி தனது மகன் கார்த்தியுடன் பைக்கில் நாயனூர் எல்லையில் உள்ள தனது நிலத்துக்கு சென்றார். பைக்கை ரங்கநாதன் ஓட்டிச் சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது, வழியில் எதிர்பாராதமாக ரங்கநாதன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ரங்கநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.  இதுகுறித்து அவரது மனைவி கல்வி அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Farmer Kills In Bike Accident ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20...