×

மாற்று இடம் வழங்கக்கோரி ஞானப்பிரகாசம் குளக்கரை பகுதி மக்கள் சப்-கலெக்டரிடம் மனு

சிதம்பரம், நவ. 12: சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்துள்ள 52 பேருக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் சிதம்பரம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு கடந்த மாதத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக வசித்து வந்த மக்கள்  தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு நகராட்சிக்கு உட்பட்ட காலி இடத்தில் மாற்று இடம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாத காலமாகியும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் வீடுகள் இழந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் விசுமகாஜனை சந்தித்து மாற்று இடம் வழங்க கோரி முறையிட்டு மனு அளித்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Tags :
× RELATED வடசேரியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு