×

வியாபாரியை தாக்கிய பெண் கைது

சேத்தியாத்தோப்பு, நவ. 12: சேத்தியாத்தோப்பு அருகே பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மைனர் (40). இவர் மாடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடு வாங்கி விற்ற பணத்தை கொடுப்பதற்காக பண்ணப்பட்டு கிராமத்தில் உள்ள காந்தி சிலை அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜோசப் மகன் ஜோதிபாசு (45), அவரது மனைவி மேரி (28) ஆகியோர் அவரை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் மைனர்வைத்திருந்த ரூ.70.000 பணத்தை ஜோதிபாசு மற்றும் அவரது மனைவி மேரியும் பறித்து சென்றனர். இதுகுறித்து ஜோதிபாசு ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் அபுஇப்ராஹிம் வழக்கு பதிவு செய்து ஜோதிபாசு மனைவி மேரியை கைது செய்தார். ஜோதிபாசுவை தேடிவருகிறார்.


Tags : businessman ,
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது