×

திருவதிகையில் வீரட்டானேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

பண்ருட்டி, நவ. 12: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி மாதம் அஸ்வினி தினமான நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு சாமி, அம்பாள் மற்றும் சரக்கொன்றை நாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் வீரட்டானேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சாத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், லிங்க திருமேனியில் சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Tags : Veeraetanesvara ,
× RELATED மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை