×

திருக்குறள் பேரவை சிறப்பு கூட்டம்

திட்டக்குடி, நவ. 12: திட்டக்குடியில் திருக்குறள் பேரவை சிறப்பு கூட்டம் நடந்தது.பேரவையின் தலைவர் முனைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ராஜரத்தினம் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் பெரியசாமி அறிக்கையை படித்தார். கல்வியாளர் சுப்பிரமணியன் குரல் அமுதம் பொருளிலும், பொன். வைத்தியலிங்கம் பொறை உடைமை பொருளிலும், அன்பானந்தம் பிறவாமை என்ற தலைப்பிலும், ரா.சு.அன்பானந்தம் மனிதநேயம் பொருளிலும், வெங்கடாசலம் இயற்கை அமுதம் தலைப்பிலும் பேசினர். கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வம், வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராமலிங்கம் நன்றி கூறினார்.


Tags : Thirukkural Council ,Special Meeting ,
× RELATED நிட்மா சங்கம் சார்பில் விஷன் இந்தியா சிறப்பு கூட்டம்