×

டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் தனியார் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருச்சி, நவ.12: டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரிக்கு மாநகராட்சி சார்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் வைத்திருக்க கூடாது என்று அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது ஆய்வுகள் செய்யப்பட்டு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் நேற்று மாநகர் முழுவதும் ஆய்வு நடந்தது. இதில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் டெங்கு கொசு உருவாகும் காரணிகள் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டதால் மாநகராட்சி சார்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதேபோல் தீடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்பட்டால் கடுமையாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராாட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு