×

துறையூர் தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறை கட்டிடம்

துறையூர், நவ.11: துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் அலுவலகம், நில அளவைத்துறை, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம், வனத்துறை, வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் அருகிலுள்ள கழிப்பறை கட்டிடம் நீண்டநாட்களாக பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்கள், அலுவலக ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் நலன் கருதி கழிப்பறையை சீரமைக்க வேண்டும், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : toilet building ,office ,Thuraiyur taluk ,
× RELATED நான்குவழிச்சாலையின் நடுவில் பராமரிப்பின்றி கருகும் செடிகள்