×

திருவாரூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் நியமனம்

திருத்துறைப்பூண்டி, நவ.12: திருவாரூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் மின் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் அமைப்பாகும்.இதற்கு மேற்பார்வை பொறியாளர் தலைவராகவும், சமூகநலனில் அக்கறை கொண்ட ஒரு நபர், வழக்கறிஞர் ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.அந்தவகையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கிரியேட் நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவரும், பாலம் சேவைநிறுவன செயலாளருமான செந்தில்குமாரை உறுப்பினராக சென்னை மின்சாரஒழுங்குமுறை ஆணையம் நியமனம் செய்துள்ளது.இவர் மூன்று ஆண்டு காலம் இப்பதவியில் இருப்பார். மேலும் இவர் திருத்துறைப்பூண்டி வட்டஅளவிலான பொது விநியோகதிட்டஆலோசனைக்குழு உறுப்பினராக திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Thiruvarur District Electricity Consumer Ombudsman ,
× RELATED புதிய நியமனம் கிடையாது ஆங்கிலேயர்...