×

திருமண உதவி தொகையை உடனே வழங்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, நவ.12: தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு திருமண உதவிதிட்டம் மூலமாக ரூபாய் 25000 வழங்குகிறது. இதற்கு திருமண பத்திரிக்கை, ஆதார், ரேஷன் கார்டு ஆகிய மூன்று ஆவணங்களுடன் சமூகநலத்துறையில் விண்ணப்பம் செய்திட வேண்டும்.சட்ட விதிமுறைகள் படி திருமண நாளில் உதவி தொகை வழங்கப்படும். 2018-2019ல் திருமணம் செய்து கொண்ட 752 தம்பதிகளுக்கு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.விசாரித்ததில் முறையான காரணம் தெரியவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகார்கள்வரப்பட்டு உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த திருமண உதவி தொகையை நம்பி தனியார் இடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி திருமணம் செய்து கொண்டவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். திருவாரூர் கலெக்டர் உடனடியாகநடவடிக்கை எடுத்து திருமண உதவிதிட்டத்தின் நோக்கம் பாழாகாமல் திருமண உதவி தொகைகளை உடனடியாக வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர் நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...