×

மக்கள் குறைதீர்நாள் கூட்டம் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

திருவாரூர், நவ. 12: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் கணவருக்கு ரூ 3 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 232 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் நீடாமங்கலம் தாலுகா காளாச்சேரி கிராமத்தில் கடந்தாண்டு பானுமதி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தற்காக அவரது கணவர் நாகராஜன் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ 3 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். இதில் டி.ஆர்.ஒ பொன்னம்மாள், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் விஜயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.Tags : electrocution ,
× RELATED திருமணமான இரண்டு ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவர் கைது