×

சிறப்பு குறைதீர் முகாம்

பாபநாசம், நவ. 12: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த நல்லவன்னியன் குடிகாட்டில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திக்கேயன், வட்ட வழங்கல் அலுவலர் சீமான், துணை தாசில்தார் ஹெலன் ஜாய்ஸ், கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் பங்கேற்றனர். முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 32 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.


Tags : grievance camp ,
× RELATED 10 தாலுகாவில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்