பாதுகாப்பு அளிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிப்பேன்

தஞ்சை, நவ. 12: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் புலவர்நத்தம் கிராமத்தை கல்லுாரி மாணவி மனு அளித்தார். அதில் தஞ்சை மாவட்டம் புலவர்நத்தம் ஆற்றங்கரை தெருவில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். கடந்த 6ம் தேதி மாலை நானும் எனது தங்கையும் வீட்டின் பின்புறம் இருந்த மாட்டை அவிழ்க்க சென்றோம். அந்த நேரத்தில் மதியழகன் மகன் கார்த்தி, எனது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் என்னையும் தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் எனது தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.அதற்குள் கார்த்தியின் தம்பி மனைவி ராசாத்தி, தம்பி ராமராஜ், சித்தி ரேவதி மற்றும் வளர்ப்பு தங்கை கவிதா ஆகியோர் வந்து மோசமான வார்த்தைகளால் திட்டினர். நானும், எனது தங்கையும் அழுது புலம்பி கதறியும் விடவில்லை. காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

Related Stories: