×

கேன்சர் நோயாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, நவ 12: வலி தாங்க முடியாமல் கேன்சர் நோயாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பூதலூர் அருகே தொண்டராயம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (60). இவருக்கு கழுத்தில் கேன்சர் ஏற்பட்டு கடந்த 4 மாதத்துக்கு முன் ஆபரேஷன் செய்யப்பட்டது. அன்றிலிருந்து வலி தாங்க முடியாமல் ஆரோக்கியசாமி அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் வலி அதிகமாக இருந்தது. இதனால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பூதலூர் போலீசில் ஆரோக்கியசாமி மகன் ஆர்வின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Cancer Patient Suicide ,
× RELATED ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி...