தஞ்சை பகுதிக்கு ரயில் வேகன்களில் 4,000 டன் யூரியா வருகை

தஞ்சை, நவ. 12: தஞ்சைக்கு ரயில் வேகன்களில் 4,000 டன் யூரியா நேற்று வந்தது. இதையடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா அனுப்பி வைக்கப்பட்டது.யூரியா உர தட்டுப்பாட்டால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வெளிமாநிலங்களில் இருந்து யூரியா உரங்கள் வரவழைக்கப்பட்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி ஆந்திரா துறைமுகத்திலிருந்து ரயில் வேகன்களில் 1,350 டன் யூரியா, ஓமன் நாட்டிலிருந்து 2,650 டன் யூரியா உரம் தஞ்சைக்கு நேற்று வந்தது. இவை அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு போதுமான இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம்செய்யப்படவுள்ளது.

Related Stories: