கும்பகோணத்தில் மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் மாநாடு

கும்பகோணம், நவ. 12: கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் தஞ்சை வருவாய் மாவட்ட அளவில் 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. பள்ளி குழந்தைகளிடம் இயல்பாக உள்ள ஆய்வு மனப்பான்மை, படைப்பு திறனை வெளிக்கொணரும் வகையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க அறிவியல் மாநாடு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாநில துணை தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

Advertising
Advertising

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 325 வகையான அறிவியல் படைப்புகளை காட்சிக்காக அமைத்திருந்தனர். இதில் திரளான மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை தயாரித்த மாணவர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பரிசு வழங்கினர். அரசு இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: