×

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு கண்டித்து வி.சி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.12: தஞ்சாவூரில் திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் உள்பட பல்வேறு போராட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் விடுதலைக்கணல் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.Tags : protests ,Tiruvalluvar Statue ,
× RELATED பாஜக வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் விசி கட்சியினர் கோரிக்கை