×

கறம்பக்குடி வியாபாரிகள் சங்க செயற் குழு கூட்டம்

கறம்பக்குடி, நவ.12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வியாபாரிகள் சங்க செயற் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சாந்திய மூர்த்தி தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் எவரெஸ்ட் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:பேரூராட்சியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றி திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்த வேண்டும். பங்களா குளத்தில் ஆழ் குழாய் கிணறு அமைத்து குளம் முழுவதும் நீர் நிரப்பி பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பேரூராட்சி வார்டு பகுதிகளில் முழுவதும் தண்ணீர் தேங்கி கழிவு நீராக மாரி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பேரூராட்சி சார்பில் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக வியாபாரிகள் சங்க பொருளாளர் பேக்கரி சரவணன் நன்றி கூறினார்.

Tags : Karambakkudy Traders Association Working Committee Meeting ,
× RELATED சாலையின் குறுக்கே மரம் விழுந்தது...