கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, நவ.12: கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வெட்டன் விடுதி அருகே நைநாங்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார் இவருக்கு சொந்த மான ஆடு ஒன்று இவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள சிவாஜி என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழ உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து கத்திக் கொண்டு இருந்தது. இதுகுறித்து உடனே ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு ஒப்படைத்தனர்.


Tags : Karambakkudi ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட...