×

கந்தர்வகோட்டை அருகே மதுபானங்களை பதுக்கி விற்ற இருவா் கைது

கந்தா–்வகோட்டை, நவ.12: புதுக்கோட்டை எஸ்பியாக பதவியேற்றக் கொண்ட அருண்சக்திகுமார் கள்ளத்தனமாக விடுமுறை நாட்களில் மதுவிற்பனை செய்யப்படுவதை கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளார். எஸ்பியின் அதிரடி உத்தரவால்.மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனா். கந்தா–்வகோட்டை பகுதியில் எஸ்ஐ சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமாபுரத்தில் பஸ்நிறுத்தம் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்லத்துரை(42)யை கைது செய்து அவாிடமிருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் குளத்துநாயகக்கா–்பட்டியில் மதுபாட்டில்களை பதுக்கி கள்ளதனமாக விற்பனை செய்த முருசேகசன்(37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.Tags : Kandharvagoda ,
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை