×

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்
ஜெயங்கொண்டம், நவ. 12: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. 2015 நவம்பர் 25ம் தேதி முதல் துவங்கி பவுர்ணமி கிரிவலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பவுர்ணமி கிரிவலத்தை திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் துவக்கி வைத்தார்.முன்னதாக கணக்க விநாயகருக்கு அபிஷேகம், பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றி கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குறுக்கள்தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்து பின்னர் பிரகாரம் வலம் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கிரிவலத்தில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


Tags : Purnami Grivalam ,Gangaikonda Cholapuram Brihadeshwara ,
× RELATED கரூர் பசுபதீஸ்வரர் கோயில்