×

வரப்பு பயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம்

அரியலூர், நவ.12: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நல்ல தருணம் இது. தற்போது சம்பா-தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் மழையும் பெய்து வருகிறது. தற்போது வரப்பில் ஈரம் அதிகமாக இருக்கும். எனவே வரப்பில் விதைகளை விதைக்க இதுவே நல்ல தருணம். நெல் பயிரின் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மையில் ஓர் அங்கமாக வரப்பு பயிர் சாகுபடி உள்ளது. வரப்பு பயிராக பயறு வகை பயிர்கள் (உளுந்து, துவரை) காய்கறி பயிரான வெண்டை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை தரக்கூடிய சூரியகாந்தி, சென்டிப்பூ பயிர்களை வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் மூலம் முதன்மை பயிரான நெல்லை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து முதன்மை பயிரில் ஏற்படும் பூச்சிகள் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது, மேலும் வரப்பு பயிர்கள் வரப்பில் வளரும் களைகள் கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த பயிர்கள் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். காய்கறி பயிரான வெண்டை நமக்கு தினசரி வருமானம் தருகிறது. இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா