×

பள்ளி மாணவி தற்கொலை

ஜெயங்கொண்டம், நவ. 12:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் திவ்யா (16). ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் கடந்த 2 நாட்களாக இருந்து வந்தார். இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த திவ்யா கடந்த 7ம் தேதி விஷம் குடித்தார். பின்னர் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : School student suicide ,
× RELATED பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி