×

மக்காச்சோள பயிருக்கு இலவச மருந்து வழங்கல்

பாடாலூர், நவ 12: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச் சோளப் பயிரைக் காப்பாற்ற வேளாண்மை துறை சார்பில் இலவச மருந்து வழங்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி பயிரான மக்கச்சோளம் அதிக அளவில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்கச்சோளப் பயிரைக் காப்பாற்ற 100 மி அளவு கொண்ட டெலிகேட் எனும் மருந்து இலவசமாக வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக நாட்டார்மங்கலம் கிராமத்தில் மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில்ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், வேளாண்மை உதவி தொழில்நுட்ப உதவி மேலாளர் குமரேசன், வேளாண்மை உதவி அலுவலர் மணிகண்டன், துரைசாமி, பயிர் காப்பீடு திட்ட அலுவலர் இமயவரமன், நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.Tags :
× RELATED ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருந்து...