×

அயோத்தி தீர்ப்பு சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு வரவேற்பு

சீர்காழி, நவ.12: சீர்காழி வட்டார சுன்னத் வல் ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக அயோத்தி பாபர் மசூதி விவகாரம் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் 2010ல் அலகாபாத் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து விட்டு தற்போது உச்சநீதிமன்றம் வங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சீர்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு வரவேற்கின்றது.நாட்டின் அமைதிக்கும் மத நம்பிக்கைகளுக்கும் பாதிப்புகள் வந்துவிடாமல் இரு சமூகங்களுக்கும், சுமூகமான தீர்ப்பை வழங்கி, இஸ்லாமியர்கள் மீது இருந்த களங்கத்தை துடைத்து, இந்து முஸ்லிம் மத வழிபாடுகளுக்கு மதிப்பளித்து அறக்கட்டளை நிறுவி வழிபாட்டுத்தளங்களை புதியதாக கட்டி வழிபட வழிவகை செய்துள்ள நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பொதுஅமைதியை விரும்பும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : Ayodhya ,Sunnah Jamaat Federation ,
× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை