×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 311 மனுக்கள் குவிந்தன

நாகை, நவ.12: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமையில் நடந்தது.மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வோறு கோரிக்கைகளை முன் வைத்து 28 மனுக்களும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரேசன் கார்டு, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 283 மனுக்கள் என்று 311 மனுக்கள் வந்தது. சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரவீன் பி நாயர் உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் பிரசாந்த், டிஆர்ஓ இந்துமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : office ,Naga Collector ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்...