×

மாநில தடகள போட்டிக்கு பொறையார் மாணவர்கள் தேர்வு

தரங்கம்பாடி, நவ.12: நாகை மாவட்டம், பொறையாரில் உள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இப்பள்ளி தடகள வீரர்கள் நாகை மாவட்ட அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில் திலோத்தமி சித்ரா என்ற 9ம் வகுப்பு மாணவி 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், 9ம் வகுப்பு அரசன் உயரம் தாண்டுதலில் முதலிடம், 12ம் வகுப்பு கலைச்செல்வன் உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டம், இவற்றில் இரண்டாமிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.


Tags : Entrance Students ,State Athletics Competition ,
× RELATED நெல்லையில் மாநில தடகள போட்டிகள்