×

சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை

சீர்காழி, நவ.12:சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை. அதனால் ரயில் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல ஆட்டோ கார் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

முக்கியமாக ரயில் வரும், புறப்படும் நேரங்களில் சீர்காழி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் வசதி வேண்டும் என்று ரயில் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சீர்காழில் இருந்து சிதம்பரம் வரை சென்று கொண்டிருந்த நகர பேருந்துகள் இயக்காமல் முடக்கப்பட்டுள்ளது சீர்காழியிலிருந்து சிதம்பரம் வரை நகர பேருந்தை இயக்கி அந்த பேருந்து ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பைபாஸ் வழியாக சிதம்பரம் வரை சென்றால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அல்லது சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே ஸ்டேஷன் வரை பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Railway Station ,Sirkazhi New Bus Station ,
× RELATED சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு...