×

தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் சிதிலமடைந்த பேருந்து நிழலகம் சீரமைக்கப்படுமா?


தரங்கம்பாடி, நவ.12: தரங்கம்பாடி அருகே உள்ள காழியப்பநல்லூரில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பயனற்று கிடக்கும் பேருந்து நிலையத்தை சீரமைத்து புதிதாக கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காழியப்பநல்லூர் கிராமத்தில் 3000 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து நிழலகம் கட்டப்பட்டு மக்களுக்கு பயன்பட்டு வந்தது. இப்பொழுது அந்த நிழலகம் மிகவும் சீர்கெட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும், மேற்கூரையில் அமைத்திருந்த ஓடுகள் உடைந்து சேதமாகி கிடக்கிறது. இதனால் மழை, வெயில் காலத்தில் பயணிகள் நிற்க முடியாத நிலையில் உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி சிதிலமடைந்த அந்த பேருந்து நிழலகத்தை சீர்செய்து புதிதாக மேல் கூரை அமைத்துத் தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : bus depot ,Kaliappa Nallur ,Tharangambadi ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...