×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டம்




நாகை, நவ.12: பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடைகளை மூடி ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை ஏற்படுத்த வேண்டும். சரியான எடையில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று (11ம் தேதி) நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை மூடிவிட்டு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது. இதை தொடர்ந்து இன்று (12ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் அடிப்படையில் நாகை மாவட்டத்தில் உள்ள 625 ரேஷன் கடைகளில் 328 ரேஷன் கடைகளை மூடி 280க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு