×

வேதாரண்யத்தில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் நகை,பணம் கொள்ளை

வேதாரண்யம், நவ.12: வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வடகட்டளை முதலியார் தோப்பு கிழக்கு பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை (40). இவர் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே மருந்துக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி அருணாதேவி (34). வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒருமகன், ஒரு மகள்.இந்நிலையில் அண்ணாதுரை நேற்று மதியம் தனது காரில் வேதாரண்யம் வந்துள்ளார். குழந்தைகள் மற்றும் அவரது மனைவி பள்ளிக்கு சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கொல்லைப்புற வேலியை திறந்து உள்ளே வந்து வீட்டின் முன் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.32 ஆயிரம் மற்றும் 6 பவுன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

வேதாரண்யம் சென்று திரும்பிய அண்ணாதுரை பூட்டு உடைந்து கிடந்தது கண்டு உள்ள சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்கள் விட்டுச்சென்ற கை கிளவுசை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Teacher ,
× RELATED ஆசிரியர் புகார் எதிரொலி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை