கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு

கரூர், நவ. 12: கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குப்பை எரிக்கப்பட்டதால் காற்றுமாசு ஏற்பட்டது.கரூர் அருகே உள்ளது காதப்பாறை ஊராட்சி. இந்த ஊராட்சி கரூர் நகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சியாக இருக்கிறது. இங்கு குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தவில்லை. தூய்மை திட்டத்தின்கீழ் குப்பை தொட்டிகள் புதிதாக வைக்கப்பட்டிருந்தும் முறையாக குப்பைகளை அள்ளுவதில்லை. குப்பைமேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாததால் நேற்று காதப்பாறை கிராம நிர்வாக அலுவலகம் அருகிலேயே குப்பை எரிக்கப்பட்டது.இதனால் காற்றுமாசு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலகம் அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைத்ததால் புகை மண்டலம் நீண்டநேரமாக காணப்பட்டது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.Tags : village administration office ,
× RELATED மக்கும், மக்காத குப்பை பிரித்து...