×

மாயனூர் கதவணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மீன்பிடி தொழில் அதிகரிப்பு

கரூர், நவ. 12: இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குறைந்த அளவிலான தண்ணீரை திறந்து விடப்பட்டாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் பரவலாக சென்று வருகிறது.இந்நிலையில் கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதே போல் மாயனூர் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மீன் பிடித்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். வாரந்தோறும் ஞாயிறு மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் இங்கு சென்றுதான் மீன்களை வாங்கி வருகின்றனர்.

இதனடிப்படையில் கதவணையில் அதிகளவு தண்ணீர் தேக்கம் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் ஆர்வத்துடன் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு அப்போதைக்கு அப்போதே விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும் மாயனூருக்கு சென்று மீன் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மீன்பிடித் தொழில், சுற்றுலா ஸ்தலமாக பார்வையிட பொதுமக்கள் வருகை போன்ற காரணங்களால் மாயனூர் கதவணை பகுதி கடந்த சில நாட்களாகவே பரபரப்புடன் காணப்படுகிறது.

Tags :
× RELATED கரூர் மாவட்டம் மாயனுர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு !