×

நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 794 எக்டேர் பரப்பில் பணி நிறைவு

கரூர், நவ. 12: நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 794 எக்டேர் பரப்பளவில் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கரூர் கலெக்டர் கூறினார்.கரூர் ஒன்றியம் ஓலப்பாளையம், நொய்யல், சேமங்கி, மூலிமங்கலம் பகுதிகளில் ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் மூலம், சுழற்கலப்பை, டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் ரூ.62.13லட்சம் மதிப்பு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2019- 20ம் ஆண்டில் 95 டிராக்டர்கள் உள்பட ரூ.3.36 கோடி மதிப்பில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சூரியசக்தியில் இயங்கும் மின்மோட்டார் (சோலார் பம்பு) வழங்கும் திட்டத்தின்கீழ் 20117- 18ம் ஆண்டில் 25 மோட்டார்களுக்கு ரூ.94.19 லட்சம் மானியம், 20118- 19ம் ஆண்டில் 67 மோட்டார்கள் ரூ.2.61 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 4500 எக்டேர் நிலத்தில் ரூ.23.34 கோடி மதிப்பில் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்து இதுவரை 794 எக்டேர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், நெல் இயந்திர நடவு அல்லது திருந்திய நெல்சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5000 வீதம் 620 எக்டேருக்கு ரூ.31லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 40சதவீதம் மானியத்தில் 50 சுழல் கலப்பைகள் ரூ.17லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது என்றார்.வேளாண் அலுவலர் உமாபதி, கால்நடைபராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன்ராம், வேளாண் உதவி இயக்குனர் சிவானந்தம், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ)ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், விஜயலெட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்,


Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது