×

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்

கரூர், நவ. 12: கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என பூஜாரிகள் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்து திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அந்த இடத்தை பட்டா வழங்க பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது.

திருக்கோயில்களில் முறையாக தொடர்ந்து பூஜை, நெய்வேத்தியம் மற்றும் திருப்பணி கும்பாபிஷேகம் இந்த கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக கோயில் கட்டிய பெரியவர்கள், சமூதாயத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களது சொத்துக்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.அரசின் இந்து அறநிலைய துறைக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கியவற்றை பாதுகாத்து பராமரிக்க வேண்டுமே தவிர சொத்தின் உரிமையாளராக மாறி விற்கவோ, தானமாக வழங்கவோ கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.எனவே அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : government ,residents ,premises ,
× RELATED தமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு