மிலாடி நபி அன்று மதுபானம் விற்றவர் கைது: கரூரில் போலீசார் அதிரடி வேட்டை

கரூர், நவ. 12: மிலாடி நபியை முன்னிட்டு நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெங்கமேடு போலீசார் மேம்பால இறக்க பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சந்து பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக கலைவாணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 230 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Milady Prophet ,
× RELATED மது கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை