×

தொழிற்சாலை கழிவுநீர் தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுக்க கோரிக்கை

திருவள்ளூர், நவ. 12 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர், தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள், அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் பா.ரஜினிகாந்த், ரவிச்சந்திரன், டி.ஏ.ரவி, டி.கே.அசோக்குமார், பி.ராஜேஷ்குமார், கோபால்ரவி ஆகியோர் தலைமையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர். மனுவின் விவரம் வருமாறு: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 283 ஏக்கரில் 142 தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் திறந்தவெளியில் சாலையோரம் சென்று, மழைநீர் கால்வாய் வழியாக தண்ணீர்குளம் ஏரியில் கலக்கிறது.

இந்த ஏரியை நம்பி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். இங்கிருந்து போர்வெல் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது. மேலும், ஏரியில் ஆடு, மாடுகளையும் விவசாயிகள் மேய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், காக்களூர் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதால், ஏரியின் தண்ணீரை அருந்தும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபட்டு வருவதால் விவசாயிகளும் ஏரியின் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காக்களூர் தொழிற்பேட்டையின் ரசாயன கழிவுநீர், தண்ணீர்குளம் ஏரிக்குள் சென்று கலப்பதை தடுத்துநிறுத்தி, ஏரியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டா

Tags : lake ,
× RELATED ஏகாட்டூர் ஏரியில் சவுடு மண் திருட்டு: 7 லாரிகள் பறிமுதல்