×

தேவாலய திறப்பு ஆராதனை விழா

திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி தெருவில் செயின்ட் செபாஸ்டின்  தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமையான இந்த  தேவாலயத்தில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்தயொட்டி “அர்ச்சிப்பு” என்ற தேவாலய திறப்பு ஆராதனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலய வாசலில் இருந்து குருக்கள் மற்றும் அருட்பணியாளர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி  ஆலயத்தினுள் செல்ல பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து அர்ச்சித்து, திருப்பலி நிறைவேற்றினார்.

பின்னர் சிறப்பு பிரார்த்தனையும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பங்குத்தந்தை சைமன், இந்திய பிரான்சிஸ்கள் மறை மாநில தலைவர் பிரவீன் ஹென்றி டிசோசா, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Church Opening Ceremony ,
× RELATED இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்