நொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி

அண்ணாநகர்: நொளம்பூர் அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் தனியாருக்கு சொந்தமான விடுதி செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்து விட்டு இங்கு வந்தால் அந்த விடுதியில் சமையல் செய்ய அடுப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.  இந்த நிலையில், கடந்த 7ம் தேதி பெருங்குடியை சேர்ந்த ரெய்ஸ் ராஜா (34), டிரைவர். இவரது நண்பர்களான மாசி (எ) ராஜேஷ், ராஜி (எ), ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேருடன் விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். சம்பவத்தன்று மூன்று பேர் மதுபானம் வாங்க வெளியே சென்றுவிட்டனர். ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா மற்றும் போதை தரக்கூடிய ஒருவித அமிலத்தை சேர்த்து காய்ச்சினர். அப்போது அதிலிருந்து காற்றில் பரவியது அப்போது ராஜா சிகரெட் பிடிக்க பற்ற வைத்தபோது தீ பற்றி ராஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு அலறினர்.

Advertising
Advertising

இதில் விக்னேஷ் லேசான தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பினார். அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் வந்தனர். ராஜாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து செய்வதறியாமல் அறையில் இருந்து வெளியே கொண்டு ராஜாவை கொண்டுவந்தனர். கடைக்கு சென்று விட்டு வந்த ராஜாவின் நண்பர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். ராஜாவை ஆம்புலன்ஸ் உதவியோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இதுகுறித்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

விசாரணையில் கஞ்சா, சாராயம் மற்றும் ஒரு அமிலத்தை சேர்த்து காய்ச்சினால் இறுதியில் அதிலிருந்து ஒரு வித ஜெல் போன்ற பொருள் வரும் அதனை எடுத்து சிகரெட்டின் மீது தடவி புகைத்தால் அதிகளவில் ஒரு புதுவிதமான போதை வரும் என்பதால் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இதுபோல் வேறு எங்காவது செய்துள்ளார்களா? அல்லது போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் ராஜாவின் நண்பர்கள் மூன்று பேரிடமும்   நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: