மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு செல்போனில் ஆபாச பேச்சு

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல் சாவடி, ஏக்கல் காலனியைச் சேர்ந்தவர் கணேஷ் (47).  இவரது மனைவி சிவகாமி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நான்கு பேருமே கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். நேற்று முன்தினம் இரவு சிவகாமியின் செல்போனில் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர், ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் கணேஷ் மணலி புதுநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து  விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு செல்போனில் ஆபாச பேச்சு