×

அயோத்தி நில தீர்ப்பு வர உள்ளதால் இந்து அமைப்புகளுடன் போலீஸ் பேச்சுவார்த்தை

பெரம்பூர்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதற்காக நாடு முழுவதும் போலீசார் மற்றும் உளவுத்துறை ஆகியோர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு சரகத்தில் உள்ள இந்து அமைப்புகளுடன் அந்த சரகத்திற்கு உட்பட்ட போலீசார் நேற்று மாலை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், புளியந்தோப்பு சரக உதவி கமிஷனர் விஜயானந்த், செம்பியம் சரக உதவி கமிஷனர் சுரேந்தர் மற்றும் புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட ஆய்வாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பாரத் இந்து முன்னணி, இந்து முன்னணி, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் முன்னணி, இந்து மகா சபா, இந்து சத்திய சேனா, இந்நு மக்கள் பாசறை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்கவேண்டும். பொதுமக்களுக்கும் இஸ்லாமியருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் தொந்தரவும் தரக்கூடாது” என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு இந்து அமைப்புக்கள் சம்மதம் தெரிவித்தாலும் ஒரு சில அமைப்பினர், “தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும். அதனால் நாங்கள் வெற்றியைக் கொண்டாடியே தீருவோம்” என முழக்கமிட்டனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Police talks ,organizations ,Ayodhya ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன்...