×

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
அப்போது, கூடுதல் இயக்குனர் கணினி மற்றும் திட்டம் பணியிடத்தை அரசுக்கு ஒப்படைப்பதை கைவிட வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். நில அளவை களப்பணியில் லைசன்ஸ் சர்வேயர் பயன்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்தீபன், மாவட்ட தலைவர் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுச்செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags : Land Survey Officers Association ,
× RELATED சாமானிய மக்கள் போக்குவரத்து சேவை...