×

கீழ்பென்னாத்தூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

கீழ்பென்னாத்தூர், நவ.8: கீழ்பென்னாத்தூரில் பொதுமக்களுக்கு கு.பிச்சாண்டி எம்எல்ஏ நிலவேம்பு குடிநீர் வழங்கினார். கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி பேசுகையில் `தற்போது மழைக்காலம் என்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னால் பேரூராட்சி தலைவர்கள் பன்னீர்செல்வம், விவேகானந்தன், நகர செயலாளர் அன்பு, ஆசிரியர்(ஓய்வு) அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொட்டான் ஏரி, கருங்காலி குப்பம் ஏரிகள் முறையாக தூர்வாரப்படவில்லை. ஏரிக்கால்வாயில் மரம், செடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்தாலும் ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஏரிகளை உடனடியாக தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : land ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்