×

வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

தண்டராம்பட்டு, நவ.8: தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் பாண்டியன் துவக்கி வைத்து பேசுகையில், `மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்தெடுக்க வேண்டும். மக்காத குப்பைகளை எவ்வாறு சேமித்து பயன்படுத்த வேண்டும். மேலும், மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விளக்கினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி காற்று மாசுபாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் .

Tags : Solid Waste Management Awareness Camp ,Vazhavanachanur Agricultural College ,
× RELATED சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய்...