×

திருவண்ணாமலை அருகே மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை அருகே மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை ஆய்வு செய்த வேளாண்மை கல்லூரி மாணவிகள் அதனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய் தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள பயிர்களை ஓசூர் தனியார் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குழுவினர் வேளாண்மை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை அடுத்த அப்புநாயக்கன்பாளையம் கிராமத்தில் நேற்று படைப்புழுக்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவை  கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் குறித்து விவசாயிக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் ஆலோசனைகள் வழங்கினர்.

Tags : maize crop ,Thiruvannamalai ,
× RELATED மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை