×

விபத்து நடக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு

காவேரிப்பாக்கம், நவ.8: காவேரிப்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடக்கும் பகுதிகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சில பகுதிகளில் ஆறு வழிச்சாலையாகவும், சில பகுதிகளில் நான்கு வழி சாலையாகவும் இருந்து வருகின்றன. இதில்  வேலூர் மாவட்டம் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து பெரும்பத்தூர் டோல்கேட் வரை தற்போது ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடப்பதால், அதனை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இரவு, பகல் நேரங்களில் அவ்வப்போது  விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், காவேரிப்பாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை ராணிப்பேட்டை  வட்டார போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவாஜி, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வக அதிகாரி கிருஷ்ணன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் வாணிசத்திரம், சுமைதாங்கி, கடப்பேரி, அத்திப்பட்டு ஜென்சன், பேருந்து நிலையம், துறைபெரும்பாக்கம்  ஜென்சன், பெரியகரும்பூர் ஜென்சன், சிறுகரும்பூர் ஜென்சன், ஓச்சேரி, களத்தூர் ஜென்சன், பெரும்புளிப்பாக்கம்  ஆகிய பகுதிகளில்  விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பகுதிகளில் மேம்பால பணிகள் தொடங்க அரசுக்கு அறிக்கை அனுப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : areas ,accident ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்,...