×

ஆக்கிரமிப்பு பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு

குடியாத்தம், நவ.8: குடியாத்தம் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். குடியாத்தம் நெல்லூர்பேட்டை சாமுண்டிபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பகுதி நகராட்சி எல்லைக்கும் மற்றொரு பகதி செருவங்கி ஊராட்சியிலும் உள்ளது.இந்நிலையில், சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள வீடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது செருவங்கி ஊராட்சி தாழையாத்தம் வழியாக சென்று ஆற்றில் கலக்க வேண்டும். ஆனால் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்  ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்கு முன் தேங்கியுள்ளது.  இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாயை சீர்செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போரட்டங்கள் நடத்தியும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளை குடியாத்தம எம்எல்ஏ காத்தவராயன், தாசில்தார் சாந்தி, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், பொறியாளர் உமா மகேஷ்வரி, பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சிவாஜி உட்பட அதிகரிகள் நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும், தேங்கிய கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள், எம்எல்ஏ உறுதியளித்தனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...