வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதலால் பரபரப்பு

வேலூர், நவ.8: வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்

தது. அப்போது மாடு ஒன்று குறுக்கே வந்ததை பார்த்த கன்டெய்னர் லாரி டிரைவர் மாடு மீது மோதாமல் இருக்க திடீரென லாரியை டிரைவர் இடது புறமாக திருப்பியுள்ளார். இதை கவனிக்காத தனியார் கல்லூரி பஸ் கன்டெய்னர் லாரி மீது மோதியது. தனியார் கல்லூரி பஸ்சை தொடர்ந்து வேகமாக வந்த காரும் பஸ் மீது மோதியது.  இதில் சிலருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ேபாக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. இருந்தாலும் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் சத்துவச்சாரி அடுத்த ரங்காபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடந்த இரண்டு விபத்துகள் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: