×

முதனை செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை


நெய்வேலி, நவ. 8: நெய்வேலி அடுத்த முதனை கிராமத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இச்சாலை வழியாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த என்எல்சி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், என்எல்சி அனல் மின் நிலையம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள்  இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக டவுன்ஷிப் வந்து செல்கின்றனர். பல வருடங்களாக சேதமடைந்து கிடக்கும் இச்சாலையை, தார்சாலையாக தரம் உயர்த்த வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்  புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.எனவே, போர்க்கால அடிப்படையில்  இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED பழுதடைந்த சாலையால் அவதி